ஏமாற்று வேலை செய்பவர்களுக்கு மீண்டும் அரசியல் அதிகாரத்தை வழங்கி ஏமாற வேண்டாம் – அமைச்சர் பழனி திகாம்பரம்

பிறப்பு : - இறப்பு :

மலையகத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றும் பெண்கள், ஒரு நாளில் அதிகளவான நேரத்தை தமது பணிக்காகவே அர்ப்பணிப்பதற்காக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

எனினும் இன்றுவரை அவர்களது வாழ்க்கையில் சுபீட்சம் எதுவும் ஏற்படவில்லையென எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 20.07.2015 அன்று பூண்டுலோயா பகுதியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்..

அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றும் வகையிலே தற்போது மலையகத்தில் தனிவீட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்ள்ளது.

மலையகத்தில் செயற்படும் தொழிற்சங்களில் அதிகளவில் பெண்களே அங்கத்துவம் வகிப்பதாகவும், இருப்பினும் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்ள அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்காக நடிவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்தாண்டு திட்டத்தை மலையகத்திலும் அமுல்படுத்தி பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத் தருவதாகக் கூறி சிலர் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மீண்டும் அரசியல் அதிகாரத்தை வழங்கி ஏமாற வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit