பெயரால் வந்த அதிர்ஷ்டம்: காதலரின் முழு திருமண செலவையும் ஏற்றுக்கொண்ட பர்கர் கிங் நிறுவனம்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவின் இல்லினொய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த காதலர்களின் திருமண செலவை பர்கர் கிங் நிறுவனம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

பாடசாலை காலத்திலிருந்து ஜோயல் பர்கரும், ஆஷ்லே கிங்கும் இணைபிரியாத நண்பர்களாக பழகி வந்தனர். நட்பு வட்டத்தில் பர்கர்-கிங் என அழைக்கப்பட்ட அவர்களின் நெருங்கிய நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இதன் அடுத்த கட்டமாக இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து அவர்களது செல்ல பெயரான பர்கர்-கிங் என்ற பெயரிலேயே நிச்சயதார்த்தம் செய்துகொள்ள விரும்பினர். ஏற்கனவே இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனத்தின் பெயர் என்பதனால், பர்கர் கிங் ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெறுவதற்காக நேரில் சென்றனர்.

இவர்களது காதல் கதையை கேட்டு வியப்படைந்த பர்கர் கிங் நிறுவனம் அவர்களின் திருமண செலவு முழுவதையும் தாமே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தது.

இதையடுத்து, அவர்களின் திருமணம் கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடந்தேறியது. இதுவரை பர்கர்-கிங் ஆக இருந்த இந்த ஜோடி திருமணத்துக்கு பின்னர் திருரூயஅp;திருமதி பர்கர் மாறிவிட்டது!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*