காமராஜரின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்க திருச்சி வருகிறார் ராகுல் காந்தி.

பிறப்பு : - இறப்பு :

காமராஜரின் 113வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சியில், எதிர்வரும் 23ஆம் திகதி, மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில், மாலை 3 மணிக்கு, இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளாதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று, சிறப்பு பேஷரை ஆற்ற உள்ளதாகவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்திற்குப் பின்னர், டெல்டா விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து, ராகுல் காந்தி கலந்துரையாட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

காமராஜர் ஆட்சி என்ற, தமிழக காங்கிரசாரின் 50 ஆண்டுகால ஏக்கத்திற்கு வடிகாலாக 2016 சட்டப்பேரவைத் தேர்தல் அமையவிருப்பதாகவும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit