பிரபஞ்ச எல்லையை விரிவாக்கும் புதிய விண்கலம்

பிறப்பு : - இறப்பு :

நவ­தா­னி­யங்கள், நவ­ரத்­தி­னங்கள் என அழைக்­கப்­படும் வரி­சையில் சூரிய குடும்­பத்தில் காணப்­படும் கோள்கள் ஒன்­பதும் இருந்து வந்­தன. ஆனால், 2006 ஆம் ஆண்டில் செக். குடி­ய­ரசு நாட்டில் நடை­பெற்ற வானி­ய­லா­ளர்­களின் (International Astronomical Union – IAU) உல­க­ளா­விய ஒன்­று­கூ­டலில் கோள்­க­ளுக்­கான வரை­வி­லக்­கணம் தொடர்­பாக வாக்­கெ­டுப்பு ஒன்று நடை­பெற்­றது. அந்த வாக்­கெ­டுப்பில் கோள்­க­ளுக்­கான புதிய வரை­வி­லக்­கணம் வெற்றி பெற்­ற­மையால், அந்தப் புதிய வரை­வி­லக்­க­ணத்­திற்கு இணங்க புளுட்டோ கோளா­னது சூரியக் குடும்­பத்தின் கோள் என அழைக்­கப்­படும் தகை­மை­யினை இழந்­தது.

இதனால் ‘நவ’ வரி­சையில் இருந்த சூரியக் குடும்பக் கோள்கள் 8 ஆக மாறி­யது. தற்­போது, அக்­கு­றிப்­பிட்ட கோள் தொடர்­பான செய்­திகள் சர்­வ­தேச ஊட­கங்­களின் அறி­வியல் பகு­தியில் அதி­க­மாக வெளி­வந்­து­கொண்­டி­ருக்­கி­றது. ஏனெனில், ஒன்­பது வரு­டங்­க­ளாகப் பய­ணித்து கொண்­டி­ருக்கும் புதிய தொடு­வானம் என்ற விண்­கலம் புளுட்டோ கோளினை அண்­மித்துப் பய­ணித்துச் செல்­ல­வி­ருப்­பதும், அது தற்­போது அனுப்பிக் கொண்­டி­ருக்கும் படங்­களும் அறி­வியல் உலகைப் பர­ப­ரப்பு மிக்­க­தாக்­கி­யுள்­ளது.

சூரிய குடும்­பத்தின் ஒன்­ப­தா­வது கோளான புளுட்டோ வானி­ய­லாளர் Percival Lowell என்­ப­வரால் அதன் இருப்புக் குறித்து 1915 ஆம் ஆண்டில் எதிர்வு கூறப்­பட்டு, மற்­றொரு வானி­ய­லா­ள­ரான Clyde Tombaugh என்­ப­வரால் 1930 ஆம் ஆண்டில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இந்தக் கோளிற்கு 5 சந்­தி­ரன்கள் காணப்­ப­டு­கின்­றன. இக்கோள் சூரி­யனை ஒரு முறை சுற்­றி­வர 247.9 புவி வரு­டங்கள் எடுக்கும் எனக் கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கோள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பின்னர் இது­வ­ரையில் இக்­கு­றிப்­பிட்ட கோள் சூரி­யனை சுற்றி வந்து ஒரு பூரண சுற்­றினை முழு­மைப்­ப­டுத்­த­வில்லை.

விண்­வெளி ஆய்­வு­களை மேற்­கொள்ளும் அமெ­ரிக்­காவின் ‘நாஸா’ நிறு­வ­ன­மா­னது 2006ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 19 ஆம் திகதி புதிய தொடு­வானம் (New Horizons) எனப் பொருள்­படும் பெய­ரினைக் கொண்ட விண்­கலம் ஒன்­றினை ஏவி­யது.

இந்த விண்­க­லத்தின் இலக்­காக புளுட்டோ கோள் மற்றும் அதன் சந்­தி­ரன்­களை அண்­மித்துச் சென்று ஆராய்­வதும், அக்­கோ­ளிற்கு அப்­பா­லுள்ள Kuiper Belt வலய விண்­பொ­ருட்கள் குறித்த தக­வல்­களைப் பெறு­வ­து­மாக அமைந்­தது அந்த விண்­கலம் ஒன்­ப­தரை வரு­டங்­க­ளாக பய­ணித்துத் தற்­போது புளுட்டோ கோளினை அண்­மித்­துள்­ளது. இந்த விண்­கலம் பய­ணித்­துள்ள தூரத்­தினைக் குறிப்­பி­டு­வ­தானால், இவ்­விண்­க­லத்­தி­லி­ருந்து அனுப்­பப்­படும் ஒளியின் வேகத்தில் பய­ணிக்கும் மின்­காந்த வானொலி அலை­க­ளா­னது சுமார் நான்கு மணித்­தி­யா­லங்கள் பய­ணித்தே புவியின் அலை உண­ரி­களை அடை­கின்­றது.

புதிய தொடு­வானம் விண்­க­லத்தின் நீண்ட பய­ணத்­தின்­போது அதன் அனே­க­மான சாத­னங்­களின் பணிகள் முடக்­கப்­பட்டு உறக்க நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. பின்னர், புளுட்டோ கோளினை அண்­மித்த நிலையில் விண்­கல சாத­னங்­களின் செயற்­பாட்­டினை புவி­யி­லி­ருந்து பரீட்­சித்­த­போது, ஒரு வழு நிலை­யொன்று விண்­வெளி ஆய்­வா­ளர்­களால் அவ­தா­னிக்­கப்­பட்­டது. இந்­நி­லைமை அந்த ஆய்­வா­ளர்­களைக் கிலே­ச­முற வைத்­தது. எனினும், அந்த வழு சரி­செய்­யப்­பட்டு விண்­க­லத்தின் சாத­னங்­களின் செயற்­ப­டு­திறன் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

மேற்­கு­றிப்­பிட்ட விண்­கலம் புளுட்டோ கோளினை அண்­மிக்­கையில் அது அக்கோள் தொடர்­பான ஒளிப்­ப­டங்­களை அனுப்ப ஆரம்­பித்­தது. அவ்­வா­றான ஓர் ஒளிப்­ப­டத்தில் புளுட்டோ கோளும் அத­னது சந்­தி­ரன்­களில் பெரி­தான Charon உம் அடங்­கிய காட்சி உள்­ள­டங்­கி­யி­ருந்­தது. இந்தப் பத்தி எழு­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கையில், குறித்த விண்­கலம் புளுட்டோ கோளின் மேற்­ப­ரப்­பி­லி­ருந்து சுமார் 12,500 கிலோ­மீற்றர் உய­ரத்தில் அக்­கோ­ளினை அண்­மித்துப் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது என்ற செய்­தி­களும் அது தொடர்­பான படங்­களும் வெளி­வந்­த­வா­றுள்­ளன.

புதிய தொடுவானம் விண்கலம் தரும் தகவல்கள் பிரபஞ்ச எல்லைகள் தொடர்பாக மனிதர் கொண்டுள்ள கருதுகோள்கள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், சூரிய குடும்ப கோள்களுக்கு அப்பால் உள்ள Kuiper Belt வலய விண்பொருட்கள் தொடர்பான ஆய்வுகளுக்கான ஒரு தொடக்கமாகவும் இந்த விண்கலத்தின் பயணம் அமையவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit