சீதனக் கொடுமையால் ஆசிட் குடித்து பெண் போலீஸ் தற்கொலை!

பிறப்பு : - இறப்பு :

மராட்டிய மாநிலத்தில் 23 வயது பெண் போலீஸ் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த வக்கீலின் மனைவியான ஷைலா டாண்டே(23) தானே மாவட்டத்தில் பெண் போலீசாக பணியாற்றியபடி, இங்குள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று தனது வீட்டில் ஷைலா பிணமாக கிடந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனதை கல்லாக்கிக் கொண்டு ஆசிட்டை குடித்த இவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானதாக அக்கம்பக்கத்து வீட்டினர் தெரிவித்தனர்.

கணவர் மற்றும் நாத்தனாரின் கொடுமை தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவை அவர் தேர்ந்தெடுத்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஷைலாவின் கணவர் மற்றும் நாத்தனார் மீது வரதட்சனை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட குற்றப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit