மராட்டிய மாநிலத்தில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை: 2 இளைஞர்கள் கைது!

பிறப்பு : - இறப்பு :

மராட்டிய மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஜலகான் மாவட்டத்தில் புஷ்வால் ராணுவ குடியிருப்பு உள்ளது. நேற்று இரவு அங்கிருந்து ஷேக்அகில் ரகுமான் என்ற ராணுவ வீரர் பணிக்கு செல்வதற்காக புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.

வழியில் அவருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ராணுவ வீரர் ஷேக்ரகுமான் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து 2 வாலிபர்களையும் நோக்கி குறி வைத்து சுட்டு விடுவதாக மிரட்டினார்.

இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஷேக் ரகுமானிடம் இருந்த கைத் துப்பாக்கியை பறித்த ஒரு வாலிபர் அவரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் ராணுவ வீரர் ஷேக்ரகுமானின் தலையில் குண்டுகள் பாய்ந்தது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பயந்து போன 2 வாலிபர்களும் கைத்துப்பாக்கியை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றனர். இதற்கிடையே ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதன்பேரில் ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 302–ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit