உலக குரூப் “பிளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறியது இந்தியா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சோம்தேவ் தேவ் வர்மன், யுகி பாம்ப்ரி ஆகியோரின் உதவியால் நியூஸிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக குரூப் “பிளே ஆஃப்’ சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளிடையிலான ஆசியா-ஓசியானா குரூப்-1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நியூஸிலாந்தில் நடைபெற்றது.

இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், மார்கஸ் டேனியலை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 18 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் சோம்தேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

இந்திய அணி வெற்றி: அடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, மைக்கேல் வீனஸýடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடி யுகி பாம்ப்ரி 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

இதனால் இந்த வெற்றிகளின் மூலம் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக குரூப் “பிளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக இந்திய அணி 2-1 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வாழ்வா – சாவா? என்ற இக்கட்டான நிலைமையில் விளையாடிய இந்திய வீரர்கள் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டனர்.

பாராட்டு: போட்டி முடிந்த பின்னர் சோம்தேவ் கூறுகையில், “வீனஸýக்கு எதிராக யுகி விளையாடிய விதம் முக்கியமானதாகும். நெருக்கடியான நேரத்தில் எங்கள் இருவரின் பங்களிப்பால் இந்திய அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்றார்.

யுகி பாம்ப்ரி கூறுகையில், “இந்தப் போட்டிக்காக தில்லியில் இரண்டு வாரங்களாக கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டேன். எனது அணிக்கும் நாட்டுக்கும் என்னால் இயன்றதை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியைப் போன்று வேறு எதுவும் பெரிதாக இருக்காது’ என்றார்.

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி ஆகிய இருவரையும் சகவீரர்கள் பாராட்டினர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*