சொந்த நாட்டிலேயே மண் கௌவியது இலங்கை அணி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு கொழும்பில் நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அகமது ஷேசாத், அசார் அலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினாரக்ள். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால், இருவராலும் அரைசதம் அடிக்க முடியாமல் போனது. ஷேசாத் 44 ரன்னிலும், அசார் அலி 49 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 16.3 ஓவரில் 93 ரன்கள் குவித்தது.

அடுத்து வந்த முகமது ஹபீஸ் 64 பந்தில் 54 ரன்களும், சர்பிராஸ் அகமது 74 பந்தில் 77 ரன்களும் எடுத்தனர். அதன்பின் வந்த சோயிப் மாலிக் 29 பந்தில் 42 ரன்களும், மொகமது ரிஸ்வான் 22 பந்தில் 35 ரன்களும் அவுட் ஆகாமல் எடுக்க பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது.

317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இலங்கை அணி, ஆரம்பத்திலேயே தொடக்க வீரர்களை இழந்து தவித்தது. திரிமன்னே(56) மட்டும் நிலைத்து நின்று ஆடினாலும் மறுமுனையில் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்த்த வண்ணம் இருந்தது. இறுதியில் அந்த அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் லேக் ஸ்பீன்னர் யாசிர் ஷா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*