போகோஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதே எனது முதன்மையான பணி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

download

நைஜீரியாவில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் போகோஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200 மாணவிகளை மீட்பதே தனது முதன்மையான பணி என அதிபர் புகாரி கூறியுள்ளார். நாளை அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்திக்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, சாத், நைஜர் உள்ளிட்ட நாடுகளில் போகோஹராம் தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல்களின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்நாட்டின் போர்னோ மாநிலம் சிபோக் என்ற இடத்தில் இருந்த அரசுப் பள்ளி மாணவிகள் 276 பேரை போகோஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இந்த மாணவிகளை மீட்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர்களை மீட்க ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் பன்னாட்டு உதவிகளுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.

இந்நிலையில், நைஜீரியாவில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள புகாரி, மாணவிகளை மீட்பது தனது முக்கிய பணிகளில் ஒன்றாகும் என அறிவித்தார்.

மேலும், போகோஹராம் தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி புதிய வியூகங்களை வகுக்கும் நடவடிக்கைகளில் புகாரி ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டனில் நாளை நைஜீரிய அதிபர் புகாரி, அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்திக்கவிருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit