பிரிட்டிஷ் ஓபன் கால்ஃப்: 2 சுற்று முடிவில் அமெரிக்க வீரர் முன்னிலை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரிட்டிஷ் ஓபன் கால்ஃப் தொடரில், 2 சுற்று முடிவில் அமெரிக்க வீரர் Dustin JOHNSON முன்னிலையில் உள்ளார். இந்திய வீரர் Anirban 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்

144வது பிரிட்டிஷ் ஓபன் கால்ஃப் தொடர் ஸ்காட்லாந்தில் ஜூலை 12 முதல் 19 ஆம் தேதி வரை களைகட்டுகிறது. நான்கு சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னனி வீரர்கள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

இந்த தொடரில் நடப்பு சாம்பியன் McIlroy காயம் காரணமாக பங்கேற்கவில்லை. 18 துளைகளில் பந்தை விழவைக்கும் இப்போட்டி 7,297 யார்ட் தூரத்திற்கு நடைபெற்று வருகிறது. இதன் 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் Dustin JOHNSON 5 Birdies, 2 EAGLES சாட்டுகள் அடித்து 69 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இங்கிலாந்து வீரர் Danny WILLETT, 5 Birdies சாட்டுகள் அடித்து இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க வீரர் Zach JOHNSON, இரண்டாவது சுற்றில் 3 BOGEYS சாட்டுகள் அடித்ததால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மிக நீண்ட தூரத்திலிருந்து குழிக்குள் பந்தை விழவைக்க வீரர்கள் அடித்த ஒவ்வொரு சாட்டுகளும் பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

இந்திய வீரர் Anirban இரண்டு Birdies அடித்து 70 புள்ளிகள் பெற்று 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீரர் டைகர் உட்ஸ் 5 BOGEYS சாட்டுகள் அடித்து 151 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த தொடரில் வெற்றி பெரும் வீரர்களுக்கு இந்திய மதிப்பில் 63 கோடி ரூபாய் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*