வவுனியா வாகன விபத்தில் ஒருவர் பலி! அறுவர் காயம்

பிறப்பு : - இறப்பு :

வவுனியா- பம்பைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டி வான் ஒன்றுடன் மோதியதினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 06 பேர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வான் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit