சம்பியன்ஸ் லீக் இருபது 20 இரத்து!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பொது மக்கள் ஆர்வம் கொள்­ளா­ததன் கார­ண­மாக சம்­பியன்ஸ் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களை அதன் ஏற்­பாட்­டா­ளர்கள் இரத்துச் செய்­துள்­ளனர்.

2009 முதல் இந்­தியா, அவுஸ்­தி­ரே­லியா, தென் ஆபி­ரிக்கா உட்­பட பல நாடு­களின் அதி சிறந்த இரு­பது 20 அணி­களைக் கொண்டு சம்­பியன்ஸ் லீக் போட்­டி­களை இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை­யினர், கிரிக்கெட் அவுஸ்­தி­ரே­லியா நிறு­வ­னத்­தினர், கிரிக்கெட் தென் ஆபி­ரிக்கா நிறு­வ­னத்­தினர் வருடாந்தம் கூட்­டாக நடத்தி­ வந்­தனர்.

இறு­தி­யாக கடந்த வருடம் நடை­பெற்ற போட்­டி­களில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்­பி­ய­னா­கி­யது.

சம்­பியன்ஸ் லீக் போட்­டி­களைக் கண்டுகளிப்­ப­தற்கு இர­சி­கர்கள் ஆர்வம் காட்டா­ததன் கார­ண­மா­கவும் அவர்கள் மத்­தியில் வர­வேற்பு இல்­லா­ததன் கார­ண­மா­கவும் இப் போட்­டி­களை நடத்­தாமல் இருப்­பதே பொருத்தம் என ஏற்பாட்­டா­ளர்கள் ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னித்து அப் போட்­டி­களை நிரந்­த­ர­மாக இரத்துச் செய்­த­தாக இந்­திய கிரிக்கெட் கட்­டுப் ­பாட்டுச் சபை விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­ டுள்­ளது.

ஆடு­க­ளத்­திற்கு வெளியே சம்­பியன்ஸ் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­கள் ­மீது துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இர­சி­கர்கள் மத்­தியில் ஆர்வம் ஏற்­ப­டா­த­துடன் அவர்கள் மத்­தியில் வர­வேற்பும் கிடைக்­க­வில்லை என இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை அதி­காரி அனுராக் தக்கூர் தெரி­வித்தார்.

இண்­டியன் ப்றீமியர் லீக் போட்­டிகள் பிர­பல்யம் அடைந்­ததன் பல­னாக சம்பியன்ஸ் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இண்­டியன் ப்றீமியர் லீக் போட்­டி­களில் சூதாட்டம் இடம்­பெற்­றமை நிரூ­பிக்­கப்­பட்டு சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டு வரு டத் தடையும் அந்த அணி­களின் அதி­கா­ரி­க­ளான குருநாத் மெய்­யப்பன், ராஜ் குந்த்ரா ஆகி­யோ­ருக்கு ஆயுட்­காலத் தடையும் இந்­திய உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான குழு­வி­னரால் விதிக்­கப்­பட்ட மறு­நா­ளான நேற்று சம்­பியன்ஸ் லீக் இரத்துச் செய்­யப்­பட்­டமை குறிப்பி­டத்­தக்­கது.

மேலும் இரண்டு அணிகளதும் உரிமையாளர்களான இண்டியா சிமென்ட்ஸ், ஜெய்பூர் ஐ.பி.எல். ஆகிய நிறு வனங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டுத்துறை சார்ந்த விட யங்களில் ஈடுபட முடியாதவாறு இரண்டு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*