வாழ்நாளில் மறக்க முடியாத அறிமுகப் போட்டி – மட்டற்ற மகிழ்ச்சியில் மணீஷ் பாண்டே!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜிம்பாப்வேக்கு எதிராக அறிமுகப் போட்டியில் களமிறங்கிய இனிமையான தருணத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என இந்திய வீரர் மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய மணீஷ் பாண்டே 71 ரன்கள் குவித்ததோடு, கேதார் ஜாதவுடன் இணைந்து இந்திய அணியையும் சரிவிலிருந்து மீட்டார். போட்டி முடிந்த பிறகு அறிமுகப் போட்டியில் ஆடிய அனுபவம் குறித்து பாண்டே கூறியதாவது:

இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எனது நீண்டகால கனவு இப்போது நனவாகியிருக்கிறது. இந்தியாவுக்காக விளையாடியதை என்னுடைய அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்புக்காக சில காலம் காத்திருந்தேன். அந்த வாய்ப்பை பெற்றபோது சிறப்பாக ஆடி ரன் குவிக்க விரும்பினேன். நான் விரும்பியதை சிறப்பாக செய்துவிட்டதாக நினைக்கிறேன்.

அறிமுக வீரராக களமிறங்கியபோது ஹர்பஜன் சிங்கிடம் இருந்து என்னுடைய தொப்பியை பெற்றது மிகச்சிறப்பான தருணம் ஆகும். அது என்னுடைய வாழ்நாள் முழுவதும் என்னுடனேயே இருக்கும். நீங்கள் மிகவும் விரும்பிய ஒரு விஷயத்தை அடையும்போது அது மட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது உங்களுக்கும் தெரியும்.

அதே மாதிரியான உணர்வுதான் எனக்கும் ஏற்பட்டது. ஹர்பஜன் சிங் என்னிடம் கொடுத்த தொப்பிக்கு முத்தமிட்டுவிட்டு மிகுந்த மகிழ்ச்சியோடு களமிறங்கினேன். இப்போது நிறைவேறியிருப்பது என்னுடைய கனவு மட்டும் அல்ல. எனது குடும்பத்தினர், கடந்த சில ஆண்டுகளாக என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் என எல்லோருடைய கனவும் அதுதான் என்றார்.

70 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அறிமுகப் போட்டியில் விளையாடியபோது உதவியாக இருந்ததா என கேட்டபோது, “நிச்சயமாக உதவியது. நான் பதற்றப்படவில்லை. ஏனெனில் இதுபோன்ற நெருக்கடியான தருணங்களை நான் இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறேன். அதுபோன்ற சூழல்களில் சிறப்பாகவும் ஆடியிருக்கிறேன்.

இந்தியாவுக்காக அறிமுகப் போட்டியில் (சர்வதேச அளவில்) விளையாடும்போது முதல்தர போட்டி அனுபவம் நிச்சயம் பலமாக இருக்கும். மகிழ்ச்சியான தருணம், கடினமான தருணம் என எந்தவித சூழலையும் எதிர்கொள்ள முதல்தர போட்டி அனுபவம் உதவியாக இருக்கும்” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*