குசல் பெரேரா அதிரடி : பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் தம்புள்ளாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி பல்லேகேலவில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் அசார் அலி, ஷேசாட் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஷேசாட் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹபீஸ் (9) வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

பாபர் (12) நிலைக்கவில்லை. மாலிக் (51), ரிஸ்வான் (52) சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்

சர்பிராஸ் (7), யாசிர் ஷா (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 287 ஓட்டங்கள் எடுத்தது.

அன்வர் (29), ரஹாட் அலி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை சார்பில், மலிங்கா, பதிரனா தலா 2, மேத்யூஸ், பிரதீப், சிரிவர்தன, டில்ஷான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 288 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கையின் குசல் பெரேரா மற்றும் தில்சான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இருவரும் சிறப்பாக ஆடினர். அதிரடியாக ஆடிய பெரேரா 13 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் தாரங்காவுடம் தில்சான் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் தாராங்க(28) தில்சான் (47) மெத்தியூஸ் (8) திரிமனானே (4) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வந்த தினெஷ் சண்டிமால் அணியை சரிவில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

இறுதியில் 48.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit