புகுஷிமா அணு உலைகளை ஆராய்வதற்கு பாம்பு வடிவிலான ரோபோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜப்­பானில் பூகம்பம் மற்றும் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட புகு­ஷிமா அணு உலை­களை ஆராய்­வ­தற்­காக பாம்பு வடி­வி­லான ரோபோ ஒன்றை அங்கு அனுப்­பு­வ­தற்கு விஞ்­ஞா­னிகள் தயா­ராகி வரு­கின்­றனர்.

2011 மார்ச் 11 ஆம் திகதி ஜப்­பானில் ஏற்­பட்ட 9 ரிச்டர் அள­வி­லான பூகம்பம் மற்றும் சுனா­மி­யினால் 15,889 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 2,600 பேர் காய­ம­டைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்த அனர்த்­தத்­தினால் புகு­ஷி­மா­வி­லுள்ள டெய்ச்சி அணுமின் நிலை­யமும் கடும் சேதத்­துக்­குள்­ளா­னது. அங்­கி­ருந்த 6 அணு­ உ­லை­களில் 3 உலைகள் உரு­கின.

இதை­ய­டுத்து, அணுக்­க­திர்­வீச்சுக் கசிவும் ஏற்­படத் தொடங்­கி­யது. உரு­கிய உலைப்­ப­கு­திக்குள் மனி­தர்கள் செல்­வது ஆபத்­தா­னது எனக் கரு­தப்­ப­டு­வதால், விசே­ட­மாக தயா­ரிக்­கப்­பட்ட ரோபோவை அனுப்பி அணு ஆலையின் உட்­புற நிலை­மை­களை ஆராய்­வ­தற்கு விஞ்­ஞா­னிகள் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர்.

60 சென்­ரி­மீற்றர் நீள­மான பாம்பு வடிவில் இந்த ரோபோ அமைக்­கப்­பட்­டுள்­ளது. 10 செ.மீ. (4 அங்­குலம்) அக­ல­மான குழாய்­க­ளுக்­கூ­டாக இந்த ரோபோக்கள் ஊர்ந்து செல்லும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தொலைக்­கட்­டுப்­பாட்டுக் கருவி மூலம் இந்த ரோபோ இயக்­கப்­படும். இந்த ரோபோ மூலம் அனுப்­பப்­படும் படங்கள் மற்றும் தக­வல்­களை ஆராய்ந்த பின்னர் உருக்­கு­லைந்த அணு உலையின் சிதை­வு­களை அப்­பு­றப்­ப­டு­த்­து­வது குறித்து ஆரா­யப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*