சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி ரத்து! – அறிவித்தது பி.சி.சி.ஐ

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

clt20-png-link

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2009ஆம் ஆண்டு ஆரம்பித்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

உலகின் முக்கிய கிரிக்கெட் கிளப்புகளைக் கொண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி கடந்த சில வருடங்களாக நடந்து வந்தது. ஆனால், அதற்குப் பெரிய வரவேற்பு இல்லாததால் இப்போது அந்தப் போட்டியை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

எனவே செப்டம்பர், அக்டோபரில் நடப்பதாக இருந்த இந்த வருட சாம்பியன்ஸ் லீக் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகூர், நிருபர்களிடம் கூறுகையில், “உலகம் முழுக்க நடக்கும் டி20 போட்டிகளுக்குக் கூடுதல் போட்டியாக சிறந்தமுறையில் சாம்பியன் லீக் தொடர் நடைபெற்று வந்தது.

கடந்த 6 போட்டிகளிலும் பல திறமையாளர்கள் இதனால் பலன் அடைந்தார்கள். ஆனால் இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக ஆர்வம் இல்லை. இந்தப் போட்டியின் பங்குதாரர்களுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவின்படி சாம்பியன்ஸ் லீக் போட்டியை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit