டோனி, ரெய்னா இல்லாமல் ஐ.பி.எல். போட்டி இல்லை! – ஆதங்கத்தில் ரசிகர்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் சென்னை ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் சரவணன். உடல் முழுவதும் மஞ்சள் பெயிண்ட் அடித்து மைதானத்தில் வந்து சென்னை அணியை உற்சாகப்படுத்துவார். அவரது உடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டோனியின் எழுத்தும், அவரது 7 நம்பரும் எப்போதும் இருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் இடங்களுக்கு எல்லாம் சென்று இந்த ரசிகர் வீரர்களை உற்சாகப்படுத்துவார். டோனியின் தீவிர ரசிகரான சரவணன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் ஆதங்கத்துடன் கூறியதாவது:–

சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்ட செய்தியை கேட்டதும் நான் கண்ணீர் விட்டு கதறினேன். எனது பெற்றோரை இழந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனது வாழ்க்கையே சென்னை சூப்பர் கிங்ஸ் தான். மஞ்சள் பெயிண்ட் இல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும்.

என்னை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லாமல் ஐ.பி.எல். போட்டியே இல்லை. ஒவ்வொரு சென்னை ரசிகருக்கும் இதே உணர்வு தான் இருக்கும். சில தனி நபருக்காக அணியை சஸ்பெண்டு செய்தது ஏன்? அவர்கள் விதிமுறையை சொல்லலாம்.

ஆனால் நான் ஒரு ரசிகன். சென்னையில் ‘தல’ டோனியை பார்க்கவே விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல பெரும்பாலான சென்னை ரசிகர்கள் 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டதை கடுமையாக சாடியுள்ளனர். பேஷன் டிசைனர் கிருஷ்ணா கூறும்போது, ஐ.பி.எல். போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இதனால் சென்னை வாசிகள் மிகவும் பெருமை அடைந்தனர்.

சி.எஸ்.கே இல்லை என்றால் பெரும்பாலான மக்கள் ஐ.பி.எல். போட்டியை பார்க்க மாட்டார்கள். டோனி, ரெய்னா இல்லாமல் ஐ.பி.எல். போட்டி இல்லை என்றார்.

பாவனா என்ற ரசிகை கூறும்போது, சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எங்களது வீரர்கள் வேறு அணிக்கு விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரசிகை என்ற முறையில் தடை விதிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகும் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*