திடீர் நிலைகுலைவால் மயங்கி விழுந்து பார்வையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பளு தூக்கும் வீராங்கனை!

பிறப்பு : - இறப்பு :

கனடா ரொறன்ரோவில் நடைபெற்றுவரும் PAN AM விளையாட்டுப் போட்டியின் பளு தூக்கும் போட்டியின் போது வெனிசுலாவைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை ஒருவர் ஏற்பட்ட திடீர் நிலைகுலைவால் மயங்கி விழுந்துள்ளார்.

233 பவுண்ட்(106 கிலோ) எடைப்பிரிவு பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற ஜெனிசிஸ் ரோட்ரிகஸ் கோமஸ் என்ற வீராங்கனை மயங்கி கீழே விழுந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எனினும் சிறிது நிமிடங்களில் மீண்டும் தன்னை சரிப்படுத்திக் கொண்ட வீராங்கனை 116 பவுண்ட் எடைப்பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளமான யூ-டியூபில் விரைவாக பரவிவருகின்றது. பளு தூக்கும் வீரர்கள் உயிரை பணயம் வைத்து எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை பலருக்கும் உணர்த்தும் காணொளியாக இது அமைந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit