இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்­டா­வது ஒருநாள் போட்டி இன்று கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச மைதா­னத்தில் நடை­பெ­று­கி­றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது. இரு அணிகள் இடை­யே­யான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2–1 என்ற கணக்கில் கைப்­பற்­றி­யது.

இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார இரண்டு போட்­டி­களில் மட்­டுமே விளை­யா­டி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அதன்­பி­றகு 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவ்­விரு அணி­களும் விளை­யாடி வரு­கின்­றன.

இந்தத் தொடரின் முதல் போட்­டியில் பாகிஸ்தான் 6 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது. இலங்­கை–­பா­கிஸ்தான் மோதும் 2ஆவது ஒருநாள் போட்டி இன்று பல்­லே­கலையில் நடக்­கி­றது. இதில் வென்று இலங்கை அணி பதி­லடி கொடுக்­குமா? என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்கை அணியில் ஒரு­சில மாற்­றங்கள் செய்­யப்­ப­டலாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பந்துவீச்சாளர்களில் ஓரிருவர் மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*