சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். இல் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பனுக்கும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் 6-ஆவது கிரிக்கெட் தொடரில் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சென்னை அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது புகார் எழுந்தது.

கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

அதோடு குருநாத் மெய்யப்பனின் மாமனார் என்.சீனிவாசன், பிசிசிஐ அமைப்பில் எந்தவிதமான பதவியையும் வகிக்கக் கூடாது என்றும், சூதாட்டம் தொடர்பாக விசாரணைக் குழு 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியை இழக்க நேரிட்டது.

இந்நிலையில், லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

லோதா அளித்துள்ள தீர்ப்பில், “குருநாத் மெய்யப்பன் பி.சி.சி.ஐ விதிமுறைகளை மீறியுள்ளார். கிரிக்கெட் மீது பற்று கொண்டவர் செய்யும் செயல் அல்ல இது. எனவே கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கிரிக்கெட் தொடர்பான எந்த விஷயங்களிலும் அவர் ஈடுபடக் கூடாது.

‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் நிர்வாகி ராஜ்குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இருவருமே மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளனர். ராஜ்குந்த்ராவுக்கும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்க 5 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது. தடை விதிக்கப்படுகிறது.

அதுபோல் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. மேலும் சென்னை அணியை நிர்வகித்து வந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் 2 ஆண்டு கால தடை விதிக்கப்படுகிறது.

அதுபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது” என கூறப்படுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*