ஐநாவே !அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்து : இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை திரட்ட விடுதலைச் சிறுத்தைகள் முனைப்பு !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் மில்லியன் கையெழுத்து இயக்கத்துக்கு வலுவூட்டும் பொருட்டு தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இலட்சம் ஒப்பங்களை திரட்டு முனைப்புக் காட்டி வருகின்றது.

இதன் தொடக்கமாக சென்னை கோயம்பேடு பகுதியில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றினை தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களது தலைமையில் மேற்கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தொடர் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில் திருமாவளவன் கருத்து தெரிவிக்கையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வரலாற்றுப் பொறுப்பு மிக்க இந்த மனிதநேயப் பணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து கொள்வதோடு ஈழத்திலே சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைகள் அனைத்திற்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களிற்கு நீதி கிடைக்கும் வரை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஐ.நாவின் மனித உரிமை சாசனத்திற்கு அமைவாக ஐனநாயக வழியிலே தொடர்ந்து போராட வேண்டும் என்று கருத்து வெளியிட்டதோடு ஈழத்தமிழர்களுக்கான நீதிக்கான மற்றும் அரசியல் விடுதலை நோக்கிய பயணத்திலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் மேலும் தெருவித்தார்.

https://youtu.be/xJRk8jdZV0I

https://youtu.be/raJK9g2CfhM

https://youtu.be/TAfwjtG7PsA

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*