நுவரெலியா – பதுளை மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது

பிறப்பு : - இறப்பு :

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் நுவரெலியா மாவட்டத்திற்காக 13.07.2015 அன்று தமது வேட்பு மனுக்களை நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கையளித்தனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைப்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 08 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட உள்ளார்கள்.

இவர்களை தெரிவு செய்வதற்கு அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிரங்கியுள்ளன.

பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையில் பாரிய போட்டி இந்த தேர்தலில் ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சி, ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, ஜனசெத பெரமுன, பெரடுகாமி சமாஜவாதி, ஒக்கோம வெசியோ, ஒக்கோம ரஜவரு, எக்சத் லங்கா பொதுஜன கட்சி, சமாஜவாதி சமாதான கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, ஜனசெத பெரமுன, பொதுஜன பெரமுன, எக்சத், புதிய சியலஉறுமய ஆகிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

இந்த தேர்தலில் மாகாண சபை உறுப்பினர்களும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேரும் போட்டியிடுகின்றனர். கடந்த பொதுத் தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க, இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, ஆகியோர் இந்த முறை ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்றனர்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டதைப் போன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறையும் ,ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்றனர். கடந்த மாகாண சபை தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்பையா சதாசிவம் இம்முறை ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிடுகின்றார். அதே போன்று கடந்த மாகாண சபை தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.உதயகுமார் இம்முறை ஜக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் போட்டியிடுகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக 03 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 03 உறுப்பினருமாக மொத்தமாக 06 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 03 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக மேலும் 02 சிறுபான்மை உறுப்பினர்களுமாக 05 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

நடைப்பெறவுள்ள பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 5 லட்சத்து 34 ஆயிரத்து 150 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்கள் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 03 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக 02 உறுப்பினர்களுமாக மொத்தமாக 05 சிறுபான்மை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் உட்பட அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகின. இறுதி தினமான 13.07.2015 அன்று பலரும் மும்முரமாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் பதுளை மாவட்டத்தில் 11 பேர் போட்டியிடவுள்ளனர். இவர்களுக்கான வேட்புமனு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் 13.07.2015 அன்று திங்கட்கிழமை பதுளை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இ.தொ.கா.சார்பாக ஆறுமுகம் கணேசமூர்த்தி, கே.கனகரத்தினம், எஸ்.சகாதேவன் உட்பட 11 பேர் போட்டியிடுகின்றனர். இ.தொ.கா பதுளையில் தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடதக்கது.

அத்தோடு முன்னால் ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ மற்றும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனுவை 13.07.2015 அன்று பதுளை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் உட்பட அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit