லண்டனில் நடைபெறும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்வு: ஊடகங்களை முன்கூட்டியே பதிவுசெய்ய கோரிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் லண்டனில் எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவிருக்கும் “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த நிகழ்வை அறிக்கையிட விரும்புகின்ற ஊடகங்கள் எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன்னதாக தமது விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடமாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றவிருக்கும் இந்த நிகழ்வு அன்றையதினம் சரியாக மாலை 6.30 மணிக்குலண்டன் ஹரோவில் உள்ள கட்வா படிடார் நிலையத்தில் (Kadwa Patidar Centre,Kenmore Avenue,Harrow, HA3 5BD) ஆரம்பமாகும்.

வரையறுக்கப்பட்ட ஆசனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதால் அனுமதிச்சீட்டுக்களை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு ஆசனங்களை ( தனி நபர் : 10 பவுண்டுகள், சிறுவர்களுக்கு இலவசம்) உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்களுக்குஅறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிகழ்வு தொடர்பில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்கும் ஊடகங்கள் தம்மை பதிவுசெய்து கொள்வதற்கும் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

ஆனந்தி சூரியப்பிரகாசம் (+44 208 543 7226), கோபி இரத்தினம் ( +44 758 597 8377), பெய்லோன் யோகரட்ணம் (+44 795 693 9874), விஜய் செந்தில் (+44 772 333 3205).

Best regards,
Kugan Thambipillai
Journalist, Secretary of
International Association of Tamil Journalists
www.iataj.org

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*