விமான வரலாற்றில் முதன் முதலாக மின்சார விமானம்! (வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விமான வரலாற்றில் முதலாவது மின்சார விமானத்தை எயார்பஸ் உருவாக்கி உள்ளது. சூரியசகத்தி வினமானத்தின் பின்னர் இந்த மின்சார விமானத்தை எயார்பஸ் உருவாக்கி உள்ளது. இதற்கு E-Fan எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த விமானத்தின் முதற்பறப்பு Didier Esteyne எனும் பிரெஞ்சு விமானியால் 40 நிமிடங்கள் பறக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Lydd விமான நிலையத்தில் ஆரம்பித்த இந்தப் பறப்பு நாற்பது நிமிடங்கள் பறந்து Manche சமுத்திரக் கால்வாயைக் கடக்க முயன்றுள்ளது.
“நாங்கள் வான் பறப்பின் முன்னோடிகளாகத் திகழ்கின்றோம்” என இந்த E-Fan திட்டத்தின் பொறுப்பாளர் Emmanuel Joubert தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் 600 கிலோகிராம் எடை மட்டுமே கொண்டது. 6.7 மீற்றர் நீளமும் 9.5 மீற்றர் அகலமும் கொண்ட இந்த விமானம், இரு இயந்திரங்களைக் கொண்டது. இந்த இரண்டு இயந்திரங்களும் மின் கலங்களைக் கொண்டது. இறக்கைகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மினகலங்கள் 60 கிலோவட் மின்வலுவை வழங்கக்கூடியவை. இதன் மூலம் இந்த விமானம், மணிக்கு 160 கிலோமீற்றர் முதல் 220 கிலோமீற்றர் வேகம் வரை பறக்கக்கூடியது.

இந்த விமானத்தின் அமைப்பானது நாளைய விமானங்கள் முழுமையான மின்சார மயமாக்கப்படுவதற்கான ஒரு முன்னோட்டமாகும். 2018 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் இந்த விமானங்கள் முதலில் விமானப்பறப்புப் பள்ளிகளிற்கு வழங்கப்பட உள்ளன. இதே நேரம் நான்குபேர் பயணம் செய்யக்கூடிய E-Fan 4.0 விமானம் 2019 ஆண்டு வெளியாக உள்ளது. இன்னமும் 20 தொடக்கம் 30 வருடங்களுள் பயணிகள் மின்சார விமானங்களை வர்த்தகப் போக்குவரத்துகளிற்காக எம்மால் தயாரிக்க முடியும் என எயார்பஸ் குழுமம் தெரிவித்துள்ளது.


Première traversée de la Manche par un avion… by 20Minutes

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*