ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது கனேடிய போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

d286fcfb-b6ba-4a1a-b588-f779bf743e5d_S_secvpf-300x225

ஈராக்கில் உள்ள ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளின் நிலைகள் மீது கனேடிய போர் விமானங்கள் நேற்றைய தினம் குண்டுவீச்சு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

இஸ்லாமிய தேசம் என்ற பேயரில் ஈராக்கின் பல பிராந்தியங்களையும கைப்பற்றி மோதல்களில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ் அமைப்பினை எதிர்த்து போரில் ஈடுபட்டுவரும் ஈராக் அரசாங்க படைகளுக்கு அனுசரணையாக கனேடிய போர் விமானங்களின் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களை கனேடிய பாதுகாப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

ஈராக் ஃபலூஜா(Fallujah) நகரின் வடகிழக்கு பராந்தியத்தில் அமைந்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் நி்லைகள் மீது தமது CF-18 ரக போர் விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாக கனேடிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலனா ப்ன்னாட்டு கூட்டுத் தாக்குதல் நடவடிக்கையில், கனடாவின் ஆறு CF-18 ரக போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CP-140 ரக அரோரா கண்காணிப்பு விமானங்கள் இரண்டு மற்றும் C-150 எரிபொருள் மீள் நிரப்பு விமானம் ஒன்றின் துணையுடன் குவைத்தில் தளம் அமைத்துள்ள கனேடிய போர் விமானங்கள் இதுவரை ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit