ஒரு நாடு இரு தேசங்கள்: கொள்கையில் மாற்றமில்லை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமஸ்டி முறையை வலியுறுத்தியே எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமையும் அத்துடன் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையில் மாற்றமில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

வட–கிழக்குத் தமிழர் தாயகங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துக் களமிறங்கவுள்ளது. நாம் ஒரு நாடு இரு தேசங்கள் என்ற கொள்கையிலிருந்து விலகாது தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம். இதில் எவ்வித மாற்றமுமில்லாது தொடர்ந்தும் மக்கள் சேவையினை மேற்கொள்வோம். எமது தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருகின்றன. தமிழர்தேசம் அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இறைமையைக் கொண்ட சமஸ்டி முறையை எமது விஞ்ஞாபனம் பிரதான விடயமாகக் கொண்டிருக்கும்

சுயநிர்ணய உரிமையுடன் தனித் தேசத்தில் தனித்துவமாக வாழ்வதே கடந்த காலத்தில் தமிழ் மக்களின் தியாகங்களுக்கு விலையாக அமையும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். அத்துடன் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் போருக்கு முன்னரும் பின்னரும் காணாமல்போனவர்கள் விடயம் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் காணிகள் அபகரிப்பு இராணுவ மயமாக்கல் திட்டமிட்டகுடியேற்றங்கள் பொருளாதார ரீதியில் எம்மை சுரண்டுதல் ஆகிய விடயங்களும் உள்ளடக்கப்படவுள்ளன.

வட–கிழக்கில் திட்டமிட்ட கட்டமைப்பு சார் இன அழிப்புக்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்துள்ளது. இச் செயற்பாட்டை நாம் தொடர்ந்தும மேற்கொள்ளவுள்ளோம்.மக்கள் தமிழ்த் தேசியத்தின் பால் நின்று எமக்கான ஆணையை நிச்சயம் வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*