
துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை, காவல்துறை அதிகாரி ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, ராணிபாக் பகுதியில் கடந்த 9ஆம் தேதி குடித்துவிட்டு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், கடந்த 10ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த சி.சி.டி.வி. பதிவாகி இருந்த இந்த கொடூரமாக காட்சியை பார்த்து அதிர்ந்து போனார்கள்.
இதனையடுத்து, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜாஸ்வீரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் கூறுகையில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், குற்றவாளிக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, ஜாஸ்வீர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜாஸ்வீர், கடந்த வியாழன் அன்றுதான், டெல்லி ராணிபாக் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். நண்பரின் வீட்டில் அவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். மதுவானது பாதிக்கப்பட்ட பெண்ணாலே வழங்கப்பட்டு உள்ளது.
அப்போது, பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி, ஜாஸ்வீர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளது. சி.சி.டி.வி. கேமரா பதிவே இவ்வழக்கில் முக்கிய சாட்சியாகும். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைநகரம் டெல்லியிலேயே காவல்துறை அதிகாரி ஒருவர், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.