ஐ.பி.எல் கிரிக்கட் சூதாட்ட வழக்கு! – 14ம் திகதி தண்டனை விபரம் அறிவிப்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான உயர்நிலைக் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உரிமையாளர்- அதிகாரிகளான குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்கான தண்டனை விவரங்களை செவ்வாய்க்கிழமை (ஜுலை 14) அறிவிக்கவுள்ளது.

இதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து செவ்வாய்க்கிழமை தெரிய வரும்.

இதுதொடர்பான வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், குருநாத் மெய்யப்பனின் மாமனாருமான சீனிவாசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும் அறிவித்தது.

அத்துடன், குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கான தண்டனையை முடிவு செய்வதற்காக முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, முன்னாள் நீதிபதிகள் அசோக் பான், ரவீந்திரன் ஆகியோரைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்தது.

அப்போது, 6 மாதங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நிலைக்குழுவுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், பிசிசிஐ அமைப்பு, அதன் விதிகளில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்தும் ஆய்வு செய்யும்படியும் கேட்டுக் கொண்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*