தந்தையின் கவனமின்மையால் பரிதாபமாக பலியான சிறுவன்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அபுதாபியில் 4 வயது சிறுவன் தன் தந்தையின் மறதியால் காரின் உள்ளே பூட்டப்பட்டதால், மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.

அபுதாபியைச் சேர்ந்த ஒருவர் தனது 4 வயது மகனை காரில் அழைத்து வந்துள்ளார். தனது இருப்பிடம் வந்ததும் காரை நிறுத்திய அவர், மகன் இறங்கியதாக நினைத்து மகனை காருக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

கடும் வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அச்சிறுவன் காரினுள் மயங்கிய நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

ஆனால், அச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஷார்ஜா போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஷார்ஜாவில் இது போன்று 5 உயிரிழப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*