இந்தியாவுக்கு எதிராக போர் நடந்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் பாகிஸ்தான் ராணுவ மந்திரி பகிரங்க மிரட்டல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவுக்கு எதிராக போர் நடந்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஹவாஜா ஆசிப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து உள்ளார்.

அத்துமீறும் பாகிஸ்தான்

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

இதனால் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ மந்திரி ஹவாஜா ஆசிப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அணுஆயுதம்

தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மறைமுகப்போர் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். தலீபான், பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியா உதவியதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றை நாங்கள் பார்வைக்கு வைக்கவில்லை. தேவைப்பட்டால் அதனை பயன்படுத்தவே வைத்திருக்கிறோம். தற்போது இந்தியாவுடன் போர் ஏற்படும் அபாயம் இல்லை. அணு ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்தியாவுடன் போர் ஏற்படக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறோம். 

ஒருவேளை போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயுதங்களை பயன்படுத்தும். தனது நாட்டை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் முழுதிறனுடன் வலிமையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடி-நவாஸ் ஷெரீப் சந்திப்பு பாதிக்குமா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 6 நாடுகளுக்கு 8 நாள் பயணமாக கடந்த 6-ந் தேதி புறப்பட்டு சென்று உள்ளார். உஸ்பெகிஸ்தானைத் தொடர்ந்து கஜகஸ்தானுக்கு சென்று உள்ள அவர், ரஷியா சென்றார். 

ரஷியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மோடி சந்தித்து இருதரப்பு உறவை வலுவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது பாகிஸ்தான் ராணுவ மந்திரியின் அணு ஆயுத மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பிரதமர் மோடி- நவாஸ் ஷெரீப் சந்திப்பு நிகழுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.  

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*