ராஜஸ்தானில் நடந்த ‘கார் விபத்துக்கு, உயிர் இழந்த சிறுமியின் தந்தையே காரணம்’ நடிகை ஹேமமாலினி குற்றச்சாட்டு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ராஜஸ்தானில் நடந்த கார் விபத்துக்கு, உயிரிழந்த சிறுமியின் தந்தையே காரணம் என ஹேமமாலினி கூறியுள்ளார்.

சிறுமி உயிரிழப்பு

இந்தி நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி, தனது உதவியாளருடன் கடந்த 2–ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார்.

இந்த கார் லால்சோட் பைபாஸ் சாலையில் தவுசா அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. இதில் எதிரே வந்த காரில் இருந்த சோனம் என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹேமமாலினியும் காயம்

மேலும் சிறுமியின் தந்தை, தாய், சகோதரர் மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் ஹேமமாலினிக்கும் மூக்கு, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவர் ஜெய்ப்பூரில் உள்ள போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து கடந்த 4–ந்தேதி வீடு திரும்பினார்.

போக்குவரத்து விதிமீறல்

இந்த நிலையில் இந்த கார் விபத்துக்கு சிறுமி சோனத்தின் தந்தையே காரணம் என நடிகை ஹேமமாலினி கூறியுள்ளார்.

இது குறித்து தனது ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் அவர் கூறுகையில், ‘ராஜஸ்தானில் நடந்த விபத்தில் தேவையில்லாமல் ஒரு சிறுமி உயிரிழந்தது மற்றும் அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்ததற்காக எனது இதயம் வருந்துகிறது. அந்த சிறுமியின் தந்தை போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும்’ என்று தெரிவித்து இருந்தார்.

மனித உரிமை ஆணையம் நோட்டீசு

இதற்கிடையே, விபத்து நடந்தவுடன் நடிகை ஹேமமாலினியுடன் சேர்த்து சோனத்தையும் உடனே மருத்துவமனைக்கு எடுத்து சென்றிருந்தால், அவளை காப்பாற்றியிருக்கலாம் என சிறுமியின் தந்தை கூறியிருந்தார்.

இந்த புகாரை தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், இது குறித்து அறிக்கை அளிக்குமாறு டவுசா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*