மத்திய பிரதேச நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரும் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மத்திய பிரதேசத்தில் நடந்த நுழைவுத் தேர்வு ஊழலை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரும் மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று(வியாழக்கிழமை) விசாரணை நடக்கிறது.

தொடர் மர்ம சாவுகள்

மத்திய பிரதேச தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. இந்த ஊழலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்த வழக்கை தற்போது மாநில ஐகோர்ட்டு மேற்பார்வையின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என இதுவரை 45 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்து உள்ளனர்.

இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன.

சி.பி.ஐ. விசாரிக்க சம்மதம்

முதலில், இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த மாநில முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்புக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்துக்குள் ஜபல்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவர் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் அனுப்பி வைத்தார். இந்த கடிதத்தை கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.கவுரவ், ஐகோர்ட்டில் மனுவாக தாக்கல் செய்தார்.

அதில், ‘‘அண்மைக்காலமாக நடந்து வரும் விரும்பத்தகாத சம்பவங்கள் காரணமாக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடவேண்டும் என மாநில அரசு விரும்புகிறது’’ என்று கூறப்பட்டு இருந்தது.

20–ந்தேதிக்கு ஒத்திவைப்பு

இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.எம். கன்வில்கர் மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘இதேபோன்ற கோரிக்கை மனுக்கள் நாளை(அதாவது இன்று) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. எனவே மாநில அரசின் மனு மீதான விசாரணை வருகிற 20–ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

இதனிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் மற்றும் சமூக ஆர்வலர்கள் 3 பேர், மத்திய பிரதேச நுழைவுத் தேர்வு ஊழல் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

இந்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் அருண்குமார், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்துகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*