தாவூத் இப்ராகீம் இந்தியா திரும்பினாரா என்பது குறித்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

பிறப்பு : - இறப்பு :

நிழல் உலக தாதாவும் இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவருமான  தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் தாவூத் இப்ராகீம் இந்தியா திரும்ப விரும்பினார் என்று முன்னாள் சிபிஐ அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
அதேபோல்,தாவூத் இப்ராகிம் நாடு திரும்ப விரும்பியதாக டெல்லி போலீசின் முன்னாள் கமிஷனர் நீரஜ் குமாரும், பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானியும் தகவல் வெளியிட்டு உள்ளனர்.எனவே தாவூத் இப்ராகிம் நாடு திரும்பி தன் மீதான வழக்குகளை சந்திக்க தயாராக இருப்பதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்று மத்தியபிரதேசத்தை சேர்ந்த கிஷோர் சாம்ரிட் என்பவர் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பாக  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இப்பிரச்சினையில் நீதித்துறையின் தலையீடு தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit