யாழ் நல்லூர் பகுதியில் உயரதிகாரியின் கள்ளக்காதலி மீது அதிகாரியின் மகள் கொலை வெறித் தாக்குதல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ்ப்பாணத்தில் கிளை அமைத்திருக்கும் அரச அலுவலகம் ஒன்றின் உயரதிகாரி அந்த அலுவலகத்தில் வேலைசெய்யும் திருமணமாகாத பெண் அலுவலரை யாழ் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டில் கொண்டு சென்று பாலியலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வீட்டினுள் புகுந்த அதிகாரியின் மகள் குறித்த யுவதியை அடித்து துவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயரிதிகாரிக்கு மனைவி அண்மையில் நோய்வாய்பட்டு உயிரிழந்துள்ளார். உயரதிகாரியின் மகள் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று வருவகின்றார்.

மேலும் இரு மகன்கள் வெளிநாட்டில் உயர்கல்வி கற்பதாகவும் தெரிவருகின்றது. குறித்த உயரதிகாரி தனது மகள் பல்கலைக்கழகம் சென்றவுடன் 11 மணிக்கே வீட்டுக்கு வந்துவிடுவாராம்.

அவர் தனது வாகனத்தை அனுப்பிவிட்டு தனியே அங்கு நிற்கும் போத நண்பகல் நேரம் அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் யுவதி வந்து போவதை அயலவர்கள் கண்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரியின் மகளுக்கு நெருங்கிய சிநேகிதியாகவுள்ள அயலவரான பெண் யுவதி வந்து போவதைத் தெரிவித்துள்ளார். நேற்று நண்பகல் யுவதி அதிகாரியின் வீட்டுக்கு வந்து நின்ற போது திடீரென அதிகாரியின் மகள் அங்கே மோட்டார் சைக்கிளில் வந்து புகுந்துள்ளார்.

உள்ளே நுழைந்து அங்கு நடந்தவற்றை நேரடியாக கண்ணுற்ற மகள் சத்தமிட்டு கத்தியதுடன் யுவதியையும் கடுமையான முறையில் தாக்கியுள்ளார்.

அதிகாரியின் மகளுக்கு தொலைபேசியில் தெரிவித்து வி்ட்டு நின்ற அயலவர்களும் மகளின் சத்தம் கேட்டு அங்கே நுழைந்து பார்த்த போது குறித்த யுவதி நிர்வாணமான நிலையில் அலுவலரின் லுங்கியை சுற்றிக் கட்டிக் கொண்டு மகளின் தாக்குதலுக்கு முகம் கொடுத்துக் கொண்டு நின்றுள்ளாள்.

அதிகாரி வீட்டின் பாத்றுாமுக்குள் சென்று கதவை மூடியபடி உள்ளே இருந்துள்ளார்.

முகத்திலும் கால்களிலும் தும்புத்தடியால் அடிவாங்கிய காயங்களுடன் நின்ற யுவதியான அலுவலரை அயலவர்கள் காப்பாற்றி அவளது உடுபுடவைகளை அணிந்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இருந்தும் கோபம் மாறாத அதிகாரியின் மகள் பெண் அலுவலரின் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொருக்கி சேதப்பட்டுத்தினார். இதன் பின்னர் தனக்கு தானே மண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்று அயலவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த உயரதிகாரி பல்வேறுபட்ட சமூகநடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக மக்களுக்கு காட்டிக் கொண்டு திரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*