செல்போனில் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் ரெயில்வே மந்திரி தொடங்கி வைத்தார்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேற்கு ரெயில்வே மின்சார ரெயில்களில் செல்போனில் காகிதமில்லா டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

மும்பையில் மேற்கு மற்றும் மத்திய ரெயில்வேக்கள் சார்பில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளை தினசரி 75 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். புறநகர் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சர்ச்கேட் – தகானு இடையே காகிதமில்லா மின்சார ரெயில் டிக்கெட்டுகளை செல்போனில் எடுத்து பயணம் செய்வதற்கான வசதியை மேற்கு ரெயில்வே  அறிமுகம் செய்தது. இந்த சேவையை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

செல்போன் டிக்கெட்டை எடுப்பவர்கள் பயணம் செய்யும் ரெயில் நிலையத்தில் இருந்து 30 மீட்டருக்கு வெளியேயும், 2 கிலோ மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும்.

இந்த காகிதமில்லா செல்போன் டிக்கெட்டை ரெயில் நிலையத்தில் வைத்தோ, பயணத்தின் போதோ எடுக்க முடியாது. இந்த டிக்கெட் மற்றவர்களுக்கு அனுப்பவோ, ஒரு முறை பதிவு செய்த பின்னர் மாற்றம் செய்யவோ முடியாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*