ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், வசதிகளை இடைநிறுத்த தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாட்டு மக்களிடையே அகெளரவத்தை சம்பாதித்தவரென்ற வகையில் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், வசதிகளை இடைநிறுத்த தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.தே.க. கோரிக்கை விடுப்பதாக அமைச்சரும் கட்சி பேச்சாளருமான அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.

நாட்டு மக்களின் கெளர வத்துடன் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அலுவலகம் வாகனங்கள் மற்றும் சலுகைகளை மக்கள் பணத்தை சுரண்டி வாழ்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவது அர்த்தமற்றது என்றும் அவர் கூறினார்.

சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தலின் போது தனக்குக் கிடைத்த அதே 58 இலட்சம் வாக்குகளை மீளப் பெறலாமென்ற வீண் நம்பிக்கையிலுள்ளார்.

இப்பொழுது அவருக்கு அவரது சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் வாக்கு கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது மகனை காப்பாற்றுவதற்காக இரத்தினபுரி அல்லது கம்பஹா, அல்லது குருணாகலையில் போட்டியிடப்போவதாக கூறிகிறார்கள். எது உண்மையென தெரியவில்லை.

இவர் மீண்டும் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எமது விருப்பம். கடந்த ஜனாதிபதி பொலன்னறுவையில் தோல்வி கண்டவர் இம்முறை குருணாகலையில் தோல்வி காணுவார்.

ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் ராஜபக்ஷ குடும்பம் அரசியலிலிருந்து ஒதுக்கப்படுவது உறுதி எனவும் அவர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*