அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே மகிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் முகமாக இறுதி முடிவொன்றை எடுபதற்கான குகிறு கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்ரியும் கலந்துகொண்டுள்ளதாக அரசியில் உயர்மட்ட செய்திகள் மடவளை நியுசுக்கு உறுதிபடுத்தின.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நியமனக் குழுவுடன் நேற்று மைத்திரிபால சிறிசேன விஜேராம மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் அனுர  யாப்பா, எஸ்.பி  உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதற்கு முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சித் தலைவர்களுடன் சுசில் பிரேம் ஜெயந்த ஆலோசனை நடத்தி இருந்தார்.

பல்வேறு தரப்பினருடன் ஜனாதிபதி மைத்ரி நடத்திய ஆலோசனைகளை அடுத்து, சில நிபந்தனைகளுடன் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதெனமுடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1.அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே மகிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும்.

2.அவரை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடியாது.

3.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  குழுத் தலைவராகவோ அல்லது மாவட்டத்தின் தலைமை வேட்பாளராகவோ அறிவிக்க முடியாது.

4.நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தமக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றினாலும் கூட மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதாக வாக்குறுதி அளிக்க முடியாது .

5.நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கமையவே பிரதமர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

மேல்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு போட்டியிட இடமளிப்பது குறித்தும், மைத்திரிபால சிறிசேன கடும் போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும்  ஊழல் மோசடி, மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள சஜின்வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா, மேர்வின் சில்வா, பிரேமலால் ஜெயசேகர ஆகியோருடன், மகிந்தவுக்கு நெருக்கமான, ரோகித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, லக்ஸ்மன் வசந்த பெரேரா, மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட பதினேழு பேருக்கு  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவுகள் எட்ட்டப்படும் என தெரிகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*