தாயகத்தை நினைவுபடுத்தும் வண்ணம் நிகழ்ந்த சுவிஸ் ஓல்டன் மனோன்மணி அம்பள் ரதோற்சவம் ! (காணொளி, படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிஸ் நாட்டின் ஓல்டேன் மாநகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா கடந்த சனியன்று (04.07.2015) ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிகழ்வுற்றது .ஐரோப்பாவின் அல்ப்ஸ் மலைசிகரங்களிடையே வளம்கொழிக்கும் சுவிட்சர்லாந்து மண்ணிலே புலம்பெயர் தமிழரிடையே ஆன்மீக வளர்ச்சிக்கு பலம் சேர்க்குமுகமாக எம்மவர் வழிபாடு செய்யும் நோக்கில் அமைக்கபபட்ட ஆலயங்களில் பெருமை பெற்ற ஆலயம் தான் ஓல்டேன் மனோன்மணி அம்பாள் ஆலயம் .

24 வருடங்களாக இந்த நகரில் அடியார்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் மனோன்மணி அம்பாள் ஆலயம் மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் ஆகம முறைப்படி சொந்த நிலத்தில் தாயகத்தில் அமைந்துள்ள ஆலயங்களை போன்றே எல்லா சிறப்புகளுடன் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

அழகிய மலைசிகரங்களைப் பின்னணி யாக கொண்ட தோற்றத்தில் செழிப்புற எழுந்தருளி அருள் பாலிக்கும் மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் ரதோற்சவநாளான சனியன்று காலை வழமை போல அபிசேக ஆராதனைகள் ,கொடிஷ்தம்ப பூசை ,வசந்தமண்டப பூசை தீபாராதனை என்பன நிகழ்வுற்றதும் அம்பாள் மற்றும் பிள்ளையார் முருகன் சமேதராக எழுந்தருளி உள்வீதி வலம் வந்து அழகிய தேரிலே ஆரோகணித்தார் . அற்புதமாக அலங்கரிக்கபட்ட மூன்று ரதங்களில் அம்பாள் ,பிள்ளையார் ,முருகன் என எழுந்தருளி அடியார்களுக்கு அருள் செய்த கண்கொள்ளகாட்சியை எமது கானொளியில் கண்டு மகிழலாம் .

முன்னே அம்பாளின் பக்தர்கள் அழகுறு காவடிகள் எடுத்து ஆடிவர கற்பூரச்சட்டி, பால்செம்பு ஏந்தி பெண்கள் நேர்த்திக்கடன் செய்துவர, தேர்வடத்தினை ஒரு புறம் ஆண்களும் மறுபுறம் பெண்களுமாக பிடித்திழுக்க தேரின் பின்னே கூட்டுபிரார்த்தனை செய்த பகதர்களின் பக்தி பரவசத்தில் அம்பாள் ரத உலா வந்த பிரமிப்பான காட்சி அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்ததை காணக் கூடியதாக இருந்தது . புலம்பெயர்ந்த மண்ணிலே எமக்கென்று ஒரு ஆலயம் அமைக்கப்பட்டு இவ்வளவு சிறப்பாக தாயகத்தில் போன்று மகோற்சவ விழாக்களை நிகழ்த்தி ரதோற்சவம் காண வைத்த ஆலய நிர்வாகத்தினரும் சளைக்காத தொண்டர்களும் பாராட்டுக்குரியவர்களே .

சுமார் ஒருகோடி இலங்கை ரூபாசெலவில் அமைக்கப்பட்ட புதிய சிற்பத்தேரோன்றினை நிரவாகத்தினர் இந்த ஆண்டு இரதோற்சவத்துக்கென வரவழைத்திருந்தார்கள்.இருந்தாலும் போக்குவரத்து தடங்கலினால் இன்னும் வந்து சேராமையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் வாகனத்தரிப்பிடம் , வெளிவீதி போன்ற திருப்பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன

Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festive Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (1) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (2) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (3) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (4) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (5) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (6) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (7) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (8) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (9) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (10) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (11) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (12) Swiss Olten Sri Manonmani Ampal Tempel Car Festivel (13)

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*