சமூக வலைதளங்களில் வெளிவந்த அதிர்ச்சி வீடியோ: சிறுவனுக்கு மது அருந்த கொடுத்த இளைஞர்கள் கைது! (வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சிறுவனுக்கு மதுக் கொடுத்து, அவனை குடிக்க வைத்து இளைஞர் கூட்டம் மகிழ்ச்சி அடையும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்பில் வெளியான அந்த காட்சியில், இளைஞர்கள் ஐந்து பேர் சிறுவனை சுற்றி அமர்ந்துக்கொண்டு, மதுவை குடிக்க கூறுகின்றனர். அதனை அந்த சிறுவனும், குடிக்கின்றான். அதை பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் சிரித்துக்கொண்டு, செல்பேசியில் படம்பிடித்து மகிழ்கின்றனர்.

இந்த காட்சி பதிவு, வாட்ஸ் அப் வழியாக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த காட்சியில் TN25 AJ 8209 என்ற எண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றும் தெரிகிறது. அதன் படி, இந்த அவல நிகழ்வானது திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த இளைஞர்கள் மேல் சோழங்குப்பம் என்ற ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஏழுமலை உட்பட 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*