தந்தையுடன் தகாத உறவு! – தன் 8 குழந்தைகளைக் கொன்ற மகளிற்கு சிறை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரான்சில் தனக்குப் பிறந்த 8 குழந்தைகளை கொன்று புதைத்த பெண்ணுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பெல்ஜியம் நாட்டின் எல்லை அருகே தனிமையான வீட்டில் வசித்து வந்தார் டாம்னிக் காட்ரெஸ் என்ற பெண். தந்தையுடன் வசித்து வந்த இப்பெண்ணுக்கு கடந்த 1989ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 8 குழந்தைகள் பிறந்துள்ளது.

ஆனால், தனக்கு குழந்தை பிறந்த விவகாரம் வெளியில் தெரியக்கூடாது என்பதால் அனைத்துக் குழந்தைகளையும் தனது வீட்டின் கழிப்பறையிலேயே அவர் பெற்றெடுத்துள்ளார். அதோடு, அக்குழந்தைகளை கொன்று அதனை பூந்தோட்டத்தில் புதைத்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு அந்த வீட்டிற்கு புதிதாக வந்த நபர், டோம்னிக்கின் கொலைகளைக் கண்டு பிடித்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக டாம்னிக் கைது செய்யப்பட்டார். பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது இந்த பயங்கர சம்பவம்.

போலீசாரிடம் டாம்னிக் அளித்த வாக்குமூலத்தில், ‘தான் சிறுமியாக இருந்த போதிலிருந்து, தனது தந்தையுடன் தனக்கு தகாத உறவு இருந்ததாகவும், அதன் விளைவாக அடுத்தடுத்து 8 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், ‘கடந்த 2007ம் ஆண்டு தனது தந்தை இறக்கும் வரையில், அவருடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், இது வெளியே தெரிந்தால் அவமானமாக போய்விடும் என்பதால் தான் 8 குழந்தைகளையும் கொன்றதாகவும்’ அவர் தெரிவித்தார்.

ஆனால், இந்த வாக்குமூலத்தை ஏற்காத நீதிமன்றம், மீட்கப்பட்ட குழந்தைகளின் சடலங்களை மரபணு சோதனை செய்தது. அதில், கொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகளும் அந்த பெண்ணின் கணவரான மேரி கார்ட்ஸ் என்பவர் மூலம் தான் பிறந்தன என்பது நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தைகளை திட்டம் போட்டு கொன்று, அதனை மறைக்க டாம்னிக் தனது தந்தை மீது பழியை சுமற்றியது நிரூபணம் ஆனது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, டாம்னிக்கிற்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டாம்னிக்குக்கு மன நலமும் சரியில்லை. குண்டாக இருந்ததால் பலரும் அவரை கேலி செய்து வந்துள்ளனர். இதனாலும் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் தான் தந்தையுடன் கொண்ட உறவால் பிறந்த குழந்தையாக இருக்குமோ என்ற பயத்திலேயே குழந்தைகளைக் கொன்று வந்துள்ளார் இவர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*