தனது குழந்தை படத்தை வெளியிட்ட மந்த்ரா மீண்டும் சினிமாவில்?

பிறப்பு : - இறப்பு :

தமிழ், தெலுங்கு பட உலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மந்த்ரா.

தமிழில் விஜய்யுடன் ‘லவ் டுடே’ படத்திலும், அஜீத்துடன் ‘ரெட்டை ஜடை வயசு’ படத்திலும் நடித்தார். ‘ப்ரியம்’, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’, ‘கொண்டாட்டம்’, ‘கண்ணன் வருவான்’, ‘சிம்மாசனம்’ உள்பட பல படங்களில் நடித்தார்.

மந்த்ராவுக்கும் தெலுங்கு டைரக்டர் ஸ்ரீனிவாசுக்கும் காதல் மலர்ந்தது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் மந்த்ரா நடிக்கவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

கர்ப்பமாக இருந்த மந்த்ராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ரிதிமா என பெயரிட்டனர். தற்போது குழந்தை ரிதிமா படத்தை மந்த்ரா வெளியிட்டு உள்ளார். மந்த்ரா மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கதை கேட்டு வருகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit