கிரீஸ் நிதி நெருக்கடியால் இந்தியாவின் ‘என்ஜினியரிங்’ ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு இன்று முதல் வங்கிகள் மற்றும் பங்குச்சந்தைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியானது. இது உலக நாடுகளின் பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. 

இந்நிலையில், கிரீஸ் நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதியாகி வரும் பொறியியற் கருவிகள் மற்றும் இயந்திரங்களின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என என்ஜினியரிங் ஏற்றுமதி அமைப்பான EEPC தெரிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு 1.86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு என்ஜினியரிங் ஏற்றுமதி இருந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவானதே. நடப்பு நிதி ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து, இத்தாலி, துருக்கி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொறியியற் தளவாடங்களின் அளவு சரிவை சந்தித்துள்ளதாக EEPC இந்தியா அமைப்பின் தலைவர் அனுபம் ஷா தெரிவித்துள்ளார். 

கிரீஸ் பொருளாதார நெருக்கடி காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி அமைச்சகமும் கவனிக்க வேண்டும் என அசோசாம் பொதுச்செயலாளர் டி.எஸ்.ராவத்தும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*