மன்னார் மாவட்டத்தில் யுத்த இழப்புக்களை சுமக்கும் பயனாளிகளுக்கு நம்பிக்கை ஒளியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு! (படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளியின் இணை நிறுவனமாக தாயகத்தில் இயங்கிவரும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் ஊடாக வட பகுதியில் விசேட தேவைக்கு உட்பட்டவர்கள், யுத்த இழப்புக்களை சுமந்து அன்றாடம் தமது தேவைகளைக்கூட நிறைவேற்ற பல்வேறு இடர்பாடுகளை எதிர் நோக்குபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறுபட்ட வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.

இதன் படி 25.06.2015 நேற்று மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

குறிப்பாக முருங்கன், வட்டக்கண்டல், தோட்டவெளி, செட்டியார் கட்டையடம்பன், பேசாலை, ஆகிய பகுதிகளில் விசேடமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் தற்போதைய நிலை தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு உண்மை நிலை அறிந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முச்சக்கரவண்டி, ஐஸ்கிரீம் தயாரிக்கும் இயந்திரம், ஆகியவற்றை தவணை முறையில் பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பக்கட்டண பணமும் மற்றைய பயனாளிகளுக்கு பால்மாடு, கோழிவளர்ப்பு, மீன் வியாபாரம், ஆகியவற்றுக்கான காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டது.

Ray of hope (1) Ray of hope (2) Ray of hope (3) 1

இந் நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மன்னார் மாவட்ட நகரசபை உப தவிசாளர், நகரசபை உறுப்பினரகள்;, மற்றும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் சார்பில்; எஸ். சிவகாந்தன் ப. சுபாஸ்கரன், கே.ரூபன், கிராமசேவையாளர் உட்பட பலர் கலந்து கொண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*