கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் போக்குவரத்து பேருந்து, அரச போக்குவரத்து பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளம்பெண்ணை தனியார் போக்குவரத்து பேருந்து மோதி தள்ளியுள்ளது.
இதில் குறித்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
எனினும் உயிரிழந்த பெண் யார்? என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.