உன்னை பெத்த அம்மாடா.. என்னை விட்டுடான்னு கெஞ்சியும் கேட்கலையே பாவி….. ஒரு தாயின் கதறல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குஜராத் மாநிலத்தில் போதை மயக்கத்தில் பெற்ற தாயையே பலாத்காரம் செய்த கொடூரனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நகராட்சி பள்ளி ஒன்றில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு 2 பெண் பிள்ளைகள், ஒரு ஆண் மகன். சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வந்த அப்பெண் கனவிலும் நினைக்காத ஒரு துயரத்தை சந்திக்க நேர்ந்தது..
இது பற்றி அந்த பெண் கூறுகிறார்…

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டம் ஜூமாவில்தான் பிறந்து வளர்ந்தோம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தின் அகமதாபத்துக்கு குடியேறினோம்.

சம்பவ நாளன்று அதாவது ஜூன் 13-ந் தேதியன்று என் மகள் வீட்டில் இருந்து நானும் என் மகனும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.. அப்போது ஆள் அரவமற்ற சாலையில் நாங்கள் சென்ற ஆட்டோவை என் மகன் சுகுன் சிங் நிறுத்தினான்.

பின்னர் என்னையும் இறங்கி வருமாறு கூறினான். அவன் ஏன் இறங்கினான் என எனக்குப் புரியவில்லை.. ஆனால் அப்போது மதுவோ அல்லது ஏதோ ஒரு போதைப் பொருளையோ அவன் சாப்பிட்டிருந்தது தெரிந்தது..

பின்னர் புதர் ஓரமாக என்னை அழைத்துச் சென்ற அவன் திடீரென என்னை கீழே தள்ளி மிக மோசமாக நடந்தான்.. நான் உன்னைப் பெற்றவள்.. என்னை விட்டுவிடு… இது மிகவும் கொடூரமானது என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தேன்.. ஆனால் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் பலாத்காரம் செய்துவிட்டான்..

பின்னர் மகள் வீட்டுக்கு வந்து நடந்த சம்பவத்தை போலீஸில் சொல்லியிருக்கிறோம்… அவனை போலீஸ் கைது செய்துள்ளது.. நிச்சயமாக கடவுள் அவனுக்கு தண்டனை கொடுத்தே தீருவார்..அவன் அனுபவிப்பான்…

இவ்வாறு கதறலுடன் அந்த தாய் கூறினார்.

இதில் மிகப் பெரும் கொடுமையாக, உடன் பிறந்த சகோதரிகளையே பலாத்காரம் செய்யவும் இந்த காமுகன் முயற்சித்திருப்பதாகவும் அவனது குடும்பத்தினர் போலீஸில் கூறியுள்ளனர்…

போதையின் கொடுமைக்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டுமோ?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*