கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்ற்றில் போராடி தோல்வியை தழுவியது இந்தியா !

பிறப்பு : - இறப்பு :

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில் ஓமனிடம் இந்தியா அணி போராடி தோல்வியடைந்தது.

2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று ஆட்டம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா-ஓமன் அணிகள் மோதின.

ஓமன் அணி உலக தர வரிசையில் இந்தியாவை விட 40 இடங்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை வென்று இருந்தது.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஓமனின் காசிம் கோல் அடித்து அந்த அணிக்கு முன்னனியை பெற்று தந்தார். கோல் அடிப்பதற்காக கடுமையாக போராடி ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் சேத்ரியின் அற்புதமான கோலால் ஆட்டத்தை 1-1 என்று சமநிலைப்படுத்தியது இந்தியா.

இருந்த போதிலும் ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் ஓமன் மற்றோரு கோலை அடித்து திரும்பவும் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இந்திய அணியின் கோல் அடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இறுதியில் 2-1 கணக்கில் ஓமன் வெற்றி பெற்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit