ஃபோர்ப்ஸ் பட்டியலில் தோனி – பணக்கட்டுகள் மேல் உறங்கும் விளையாட்டு வீரர்! (படங்கள்)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கடந்த 12மாதங்களில் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதித்துள்ள 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேனி பேக்கியோ, 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் முதலிடம் பிடித்தார்.

அண்மையில் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மேனி பேக்கியோவை வீழ்த்தியதால் மட்டும் 1200 கோடி ரூபாயை மேவெதர் சம்பாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மேவெதர், தற்போது படுக்கையில் பணக்கட்டுகளை போட்டு அதன் மேல் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டவர். ஒரு விமானம் மற்றும் 8 விலை உயர்ந்த கார்களை மேவெதர் வைத்துள்ளார்.

பட்டியலில் பிலிப்பைன்ஸ் குத்துச்சண்டை வீரர் மேனி பேக்கியோ, கால்பந்து வீரர் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி 160 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 2வது இடத்தை பிடிக்கிறார். மேதெவருக்கு எதிரான சண்டையின்போது பேக்கியோவுக்கு 800 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதனால் ரொனால்டோ இடத்தை மேனி பேக்கியோ பிடித்தார்.

போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 79.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயுடன் 3வது இடத்தை பிடிக்க, அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி 73. 8 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்று 4வது இடத்தை பெற்றுள்ளார். அடுத்த இடத்தை சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் பிடிக்கிறார்.

இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 23வது இடத்தை பெற்றுள்ளார். தோனி கடந்த 12 மாதங்களில் 31 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றுள்ளார். இதில் 4 மில்லியன் சம்பளமாகவும், 27 மில்லியன் விளம்பர வருமானமாகவும் கிடைத்துள்ளது. கடந்த பட்டியலில் தோனி 22வது இடத்தை பிடித்திருந்தார்.

கடந்த 2014 ஜுன் முதல் 2015ஆம் ஆண்டு ஜுன் வரை கிடைத்த வருவாய் இதில் கணக்கிடப்பட்டுள்ளது.

download (10)

download (9)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit