இலங்கையின் மந்திரியாக பதவியேற்ற கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்…!!!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா. சிறந்த அதிரடி தொடக்க வீரரான இவர் 1996–ம் ஆண்டு இலங்கை உலககோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனாவின் அரசில் ஜெயசூர்யாவுக்கு துணை மந்திரி பதவி கிடைத்துள்ளது. அவர் நேற்று பதவியேற்று கொண்டார்.

அவருடன் சேர்ந்து மேலும் 3 பேரும் துணை மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். ஜெயசூர்யா இதற்கு முந்தைய ராஜபக்சே அரசியல் துணை மந்திரியாக பதவி வகித்து இருந்தார்.

தனது சொந்த மாவட்டமான மாத்தறையில் இருந்து 2010–ம் ஆண்டு அவர் எம்.பி.யாக தேர்வு பெற்றார். அவர் 74 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று இருந்தார்.

தற்போது பதவியேற்றுள்ள 4 பேரும் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். ஏற்கனவே மந்திரிகளாக இருந்த 4 பேர் சமீபத்தில் பதவி விலகி ராஜபக்சே கோஷ்டியில் இணைந்தனர். அவர்களுக்கு பதிலாகவே ஜெயசூர்யா உள்ளிட்ட 4 பேர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit