அடுத்த மாதம் ஜிம்பாப்வே பயணம் செய்யவுள்ளது இந்திய கிரிக்கெட் அணி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேச தொடரை முடித்துக் கொண்டு அடுத்து ஆப்பிரிக்க தேசமான ஜிம்பாப்வேக்கு செல்கிறது.

அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் அலஸ்டயர் கேம்பெல் கூறுகையில், ‘இந்திய அணி ஜூலை 7-ந்தேதி ஜிம்பாப்வே வருகிறது.

3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி விட்டு ஜூலை 20-ந்தேதி நாடு திரும்புகிறது. அனைத்து ஆட்டங்களும் ஹராரேவில் நடைபெறும்.

அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை இந்த வார இறுதியில் வெளியாகும்’ என்றார். ஜூலை 10, 12, 14 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டியும், ஜூலை 17, 19-ந்தேதிகளில் 20 ஓவர் போட்டியும் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*