டெண்டுல்கர்-வார்னே கூட்டணிக்கு போட்டியா? – ஜோன்ஸ் பேட்டி

பிறப்பு : - இறப்பு :

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே ஆகியோர் நடத்த திட்டமிட்டுள்ள ஜாம்பவான்கள் கிரிக்கெட் தொடருக்கு போட்டியாக மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இருக்குமா என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

ஜாம்பவான்கள் கிரிக்கெட்:

ஓய்வுப் பெற்ற வீரர்களைக் கொண்டு ஜாம்பவான்கள் டி-20 கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வார்னேவும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதேபோல ஓய்வுப் பெற்ற வீரர்களைக் கொண்டு மாஸ்டர்ஸ் சாம்பியன் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் துபாயில் மற்றொரு போட்டித் தொடர் நடத்துவதற்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்தத் தொடர் டெண்டுல்கர்-வார்னே கூட்டணிக்கு போட்டியா என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

போட்டியா?:

டெண்டுல்கர்-வார்னேவைப் போன்று நாங்கள் ஒரு தொடரை நடத்த விரும்புகிறோம். ஆனால் இது அவர்களுக்கு போட்டியானது அல்ல. கடந்த பிப்ரவரியில் போட்டி நடைபெறவுள்ள இடத்தை முடிவு செய்தோம். அவர்களும் (டெண்டுல்கர் – வார்னே) எங்களுடன் இணைந்து விளையாடலாம்.

இதுகுறித்து நாங்கள் அவர்களுடன் பேசினோம். ஆனால் அவர்களின் முயற்சியில் தீவிரமாக இருப்பதை புரிந்துகொண்டேன். நாங்கள் சிறந்தத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம். இதேபோல அவர்களும் வெற்றி பெறுவார்கள்.

விதிகளை பின்பற்றுவோம்:

கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய புற்றுநோய் சூதாட்டம். உலகக்கோப்பை, ஐபிஎல், பிக்பாஷ் ஆகிய போட்டித் தொடர்களுக்கு ஐசிசி வகுத்துள்ள விதிமுறைகளை நாங்கள் கடைபிடிப்போம் என்றார் ஜோன்ஸ்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit